தென்காசி: சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவரின் 307-வது பிறந்தநாள் விழா இன்று (செப் 1) கொண்டாடப்பட்டு வருகிறது. பூலித்தேவர் சிலைக்கு அவரது வாரிசுதாரர் சிபி உள்ளமுடையார் துரை சார்பிலும், ஊர் மக்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அதிமுக, திமுக, மதிமுக, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் அமைச்சர், முன்னாள் அமைச்சர், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல் முருகன், அமமுக சார்பில் அதன் நிறுவனர் டிடிவி தினகரன், அய்யாதுரை பாண்டியன் பேரவை நிறுவனர் அய்யாதுரை பாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையொட்டி நெல்லை மண்டல டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் தலைமையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் உள்ள 13 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "'சல்லிக்காசு தரமுடியாது' என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம், நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு, இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்." என பதிவிட்டிருந்தார்.
-
"சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) September 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு!
இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்! pic.twitter.com/4Cc4bhmyma
">"சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) September 1, 2022
நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு!
இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்! pic.twitter.com/4Cc4bhmyma"சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) September 1, 2022
நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு!
இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்! pic.twitter.com/4Cc4bhmyma
இதையும் படிங்க: மக்களுக்காக தளராது பாடுபட்டவர் பூலித்தேவர்... பிரதமர் மோடி...