சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் அனு. இவர் மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெற்ற கடன்தொகையை எடுப்பதற்காகப் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவருக்குப் பணம் எடுக்க உதவுவது போன்று நடித்த பெண், ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை எனக்கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடமிருந்த கார்டை மாற்றி அளித்துள்ளார். தொடர்ந்து அனுவை அருகிலுள்ள மற்றொரு ஏடிஎம்மிற்கு செல்லும்படி அனுப்பிய அப்பெண், அடுத்த நிமிடமே, அனுவின் சேமிப்பு கணக்கிலிருந்த 35ஆயிரம் ரூபாயினை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்த குறுந்தகவல் தனது செல்போனுக்கு வந்தததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அனு உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஏடிஎம்மிலுள்ள சிசிடிவி காட்சி வைத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அதிலுள்ள காட்சிகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:விஷ ஊசி போட்டு பெண் அரசு மருத்துவர் தற்கொலை!