ETV Bharat / state

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்திய விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

author img

By

Published : Oct 8, 2021, 7:09 PM IST

நிபா தொற்று, கரோனா தொற்று உள்ளிட்டத் தொற்றுகள் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் பேசிய சவுமியா சுவாமிநாதன்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கலையரங்கத்தில் 2014ஆம் ஆண்டு சேர்ந்த, மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று (அக்.08) நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி சிறப்பு விருந்தினராகப்பங்கேற்று, மருத்துவப் பட்டம் முடித்த 94 மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

மருத்துவர்களுக்குப் பாராட்டு

பின்னர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் கலந்துகொண்டு ஆட்சியர், மருத்துவப் பேராசிரியர், மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், கரோனா தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், நிபா தொற்று, கரோனா தொற்று உள்ளிட்ட தொற்றுகள் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: அக்.20ஆம் தேதி 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம் - மத்தியப்பல்கலைக்கழக துணைவேந்தர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.