ETV Bharat / state

தனியார் மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை: சிவகங்கை ஆட்சியர் - Sivaganga district Hospital

சிவகங்கை: தனியார் மருத்துவமனைகளில் பற்றாக்குறை இல்லாமல் ஆக்சிஜன் விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவகங்கை ஆட்சியர்
சிவகங்கை ஆட்சியர்
author img

By

Published : Jun 8, 2021, 9:22 PM IST

சிவகங்கையில் அரசு மருத்துவமனையில் இரண்டாயிரம் படுக்கைக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க ஏற்பாடு

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஷ்வரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் முயற்சியால் தற்போது ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியா மதுரையில் இருந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.