சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடைபெற்ற 'நமது அம்மா' பத்திரிகை ஆசிரியர் மருது அழகுராஜ் இல்லத் திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் முதலமைச்சர் முன்னிலையில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோரும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.