சிவகங்கை மாவட்டம் நடுமாங்குடியை சேர்ந்த மழைசாமி என்பவரது மனைவி அழகேஸ்வரி(47). இவர் வீட்டின் பின்புற பகுதியில் ஆடு மேய்துக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்தில் இடி தாக்கியதில் அழகேஸ்வரி சம்பவ இடத்தலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இடி விழுந்த அதிர்ச்சியில் மரத்திற்கு சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த பெருமாள் மற்றும் கருப்பையா என்பவர்கள் மயங்கி விழுந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதேபோல், நடுமாங்குடிக்கு அருகில் உள்ள காயங்குளம் கிராமத்தில் தெய்வா என்பவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த இரண்டு பசு மாடுகளும் இடி தாக்கி பலியாகின. வெயிலின் தாக்கம் சிவகங்கையை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த இப்பெருமழையால் அப்பகுதி மக்கள் மகிழ்சி அடைந்து கொண்டிருந்த நிலையில் இச்சம்பவங்களால் அக்கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.