ETV Bharat / state

23 ஆடுகளைக் கொன்ற இடி! - goats died

சிவகங்கை: கூத்தாண்டம் அருகே இடி தாக்கியதில் 23 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை
author img

By

Published : May 19, 2019, 10:41 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை முதல் சூரியன் சுட்டெரித்து வந்தநிலையில், மதிய நேரத்தில் திடீரென வானம் கருமேகத்தால் சூழப்பட்டது. இதனால் சிவகங்கை, காளையார்கோவில், கொள்ளங்குடி, நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூரைகாற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரைமணி நேரம் நீடித்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கூத்தாண்டம் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்த ஆண்டார் என்பவர் மீது இடி தாக்கியுள்ளது. இதில், மயங்கி விழுந்த ஆண்டாரை மீட்ட அருகிலிருந்தோர் அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்தித்தனர். மேலும், இடி தாக்கிய சம்பவத்தில் ஆண்டாரின் 23 ஆடுகள் பலியாகின.

உயிர்களைக் காவு வாங்கிய இடி

இது குறித்து ஆண்டாரின் மகன் கூறும்போது, ‘விவசாய குடும்பமான எங்களுகளுக்கு இந்த ஆடுகள் மட்டுமே ஒரே வாழ்வாதாரமாக இருந்தது. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும்’ என கோரிக்கைவிடுத்தார்.

சிவகங்கை    ஆனந்த்
மே.17

சிவகங்கையில் இடி மின்னலுடன் மழை! இடி தாக்கியதில் 23 ஆடுகள் பலி!

சிவகங்கையில் இன்று இடி மின்னலுடன் பெய்த கனமழையில் இடிதாக்கி 23 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

சிவகங்கையில் கோடை வெய்யில் சுட்டெரித்த நிலையில் இன்று பிற்பகலில் கார்மேகம் சூழந்து இதமான சூழ்நிலை நிலவி வந்தது. மதியம் சிவகங்கை, காளையார்கோவில், கொள்ளங்குடி, நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டம் பகுதியில் பலத்த சூரைகாற்று வீசியது தொடர்ந்து, இடி மின்னலுடன் மழை பெய்தது. 

சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் நிலத்தடி நீர் மட்டும் உயரும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 இந்நிலையில் இடி, மின்னலுக்கு கூத்தாண்டம் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆண்டார் என்பவர், அருகில் பலத்த சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் 23 ஆடுகள் பலியனது. மேலும் ஆடு மேய்த்த ஆண்டார் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பேட்டி- கொண்டையப்பன் (உறவினர், மகாசிவனேந்தல்)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.