சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலையில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜா பேசுகையில், "கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
பேனர் அகற்றப்படும்
பிரதமரின் புகைப்படம் இல்லை. பிரதமர் மோடியின் புகைப்படம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். பிரதமர் மோடி புகைப்படம் இல்லையென்றால் பேனர்கள் அகற்றப்படும்" என்றார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டு வாங்க நேயாளிகள் அவதி!