ETV Bharat / state

நூதனமுறையில் முதியவரின் மீது பொடியை தூவி ரூ. 2 லட்சம் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு - நூதனமுறையில் முதியவரின் மீது பொடியை தூவி ரூபாய் 2 லட்சம் திருட்டு

சிவகங்கையில் முதியவரின் மீது பொடியை தூவி ரூ. 2 லட்சத்தை திருடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நூதனமுறையில் முதியவரின் மீது பொடியை தூவி ரூபாய் 2 லட்சம் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

author img

By

Published : Jul 2, 2022, 7:58 AM IST

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த முகமது ரஃபீக், அவரது மனைவி ரக்ஷயா பானு ஆகிய இருவரும் வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு, அரண்மனை வாசல் வழியாக இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் பொருள்கள் வாங்குவதற்காக அவரது மனைவி இறங்கியுள்ளார்.

நூதனமுறையில் முதியவரின் மீது பொடியை தூவி ரூபாய் 2 லட்சம் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

இதனை நோட்டமிட்ட இருவர், முகமது ரபிக் முதுகின் மீது ஏதோ பொடியைத் தூவியுள்ளனர். அதனை என்னவென்று பார்ப்பதற்குள் ஒரு இளைஞர் வண்டியில் இருந்த ரூ. 2 லட்சத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்துடன் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றனர். இக்காட்சிகள் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - மகளை முதல் நாளில் ஸ்கூலில் சேர்க்க சென்றபோது நிகழ்ந்த சோகம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.