ETV Bharat / state

மடப்புரம் காளி அம்மன் கோயில் உண்டியல் பணியின்போது 10 சவரன் தங்க நகை திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய செயல் அலுவலர்! - மடப்புரம் காளி அம்மன் கோயில்

Chain robbery at Madapuram Kaliamman temple: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணுவதற்காக நேற்று திறக்கப்பட்ட நிலையில், உண்டியலில் இருந்து 10 சவரன் தங்க நகையை கோயில் செயல் அலுவலர் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

chain robbery at Madapuram Kali temple
மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 2:18 PM IST

Updated : Nov 10, 2023, 2:29 PM IST

மடப்புரம் காளி அம்மன் கோயில் உண்டியல் பணியின்போது 10 சவரன் தங்க நகை திருட்டு

சிவகங்கை: திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். இந்நிலையில், நேற்று பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணுவதற்காக உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது கோயில் செயல் அலுவலர் விஸ்வமூர்த்தி என்பவர், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்த தங்க நகைகளில் 10 சவரன் தங்க நகையை திருடி, தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்த காட்சிகள் சிசிடிவியில் பதிவானது. இதனை கோயில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்த கோயில் நிர்வாகம், காவல் நிலையத்தில் செயல் அலுவலர் மீது திருட்டு தொடர்பாக புகார் அளித்துள்ளது.

மேலும், உண்டியல் என்னும் பணி யூடியூப் (youtube) மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. அந்த திருட்டு சம்பவம் நடந்த நேரத்தில் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த திருட்டு சம்பவத்தில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க:எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்; சபாநாயகர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Nov 10, 2023, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.