சிவகங்கை: மானாமதுரை அருகே பர்மா காலனி பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள், காடுகளில் வேட்டையாடுவது, தேன் எடுப்பது உள்ளிட்ட தொழில்களை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றனர்.
இத்தகையச் சூழலில் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காட்டுநாயக்கன் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க கோரி மனு கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரையிலும் எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்கவில்லை, அலைகழிப்பு மட்டுமே செய்து வருகின்றனர்.
இத்தனை ஆண்டுகள் மனு கொடுத்தும் சான்றிதழ் கிடைக்காததால் இன்று எங்களுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்று கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இனத்தைச் சார்ந்த மக்கள் அவர்களின், தொழில் சார்ந்த பொருள்களையும், பாம்புகளையும் வைத்து போரட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்யப்பட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அங்கிருந்து அம்மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!