ETV Bharat / state

சுமுகமான கப்பல் போக்குவரத்திற்கான பணிகள் தொடங்கப்படும் - இலங்கை அமைச்சர் - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு சுமுகமான கப்பல் போக்குவரத்து

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு சுமுகமான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க பணிகள் நடைபெறும் என்று இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

Sri Lankan Minister viyazhenthiran
Sri Lankan Minister viyazhenthiran
author img

By

Published : Sep 17, 2021, 6:18 AM IST

சிவகங்கை: இலங்கையில் இருந்து வருகை தந்த அந்நாட்டு பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டைமான், மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பட்டமங்கலம் வந்தனர். அவர்களை ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், 300க்கும் மேற்பட்ட படகுகள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ளது. அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பிரதிநிதிகளுடன் இலங்கை மீனவர்களை பேசவைத்து இரு நாட்டு மீனவர்களும் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை செய்திட நடவடிக்கை வேண்டும். மீனவர் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக உடன்பாடு ஏற்படுத்திட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

Also read: நல்ல நேரம் போஸ்ட் - துரைமுருகன் மகனுக்கு கெட்ட நேரம்

அதேபோல், சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவது குறித்தும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்கக் கோரியும், இருதரப்பு மீனவர்களிடையே இடையே சுமுக தீர்வு ஏற்படுத்தித்தர அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான், “இலங்கையில் உள்ள இந்திய படகுகளை விடுவிக்க வேண்டும். எதிர்காலத்தில் கடலில் நட்பு பயணம் இருக்க வேண்டும்.

இலங்கையில் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எதிர்காலத்தில் ஒரு சுமுகமான உறவுகளை ஏற்படுத்தவும் அமைதியான முறையில் மீன்பிடித் தொழிலை செய்வதற்கு ஏற்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்திட இலங்கை அமைச்சர்களிடம் தெரிவித்து நட்பு ரீதியான உறவுகள் மேம்படுத்தப்படும்” என்று உறுதி கூறினார்.

Also read: 654 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த கே.சி வீரமணி - லஞ்சஒழிப்புத் துறை!

இலங்கைக்கும் இந்தியாவிற்கான நட்பு கலாசார ரீதியிலானது. அது என்றும் போல் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நல்ல நிலையில் உள்ள படகுகள் ஒப்படைக்க இலங்கை அரசுடன் பேசி அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், குறுகிய கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் இரண்டு கடலோர காவல் படையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள். இரு நாட்டு கடற்படையினர் பேசி சுமூக தீர்வு ஏற்பட இலங்கையில் கோரிக்கைகளை தெரிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அளித்த பேட்டியில், “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு சுமுகமான கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து உரையாடினோம். அவரும் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.