ETV Bharat / state

'போராடுவது சரிதான்... போராட்ட முறைதான் தவறு..!' - நந்தினிக்கு நீதிபதி அறிவுரை - சமூக ஆர்வலர் நந்தினி சொந்த பிணையில் விடுவிப்பு

சிவகங்கை:"சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போராடுவது சரிதான்... போராட்ட முறை தவறானது" என்றும் நீதிபதி அறிவுரைக் கூறி சமூக ஆர்வலர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்த் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சமூக ஆர்வலர் நந்தினி சொந்த பிணையில் விடுவிப்பு!
author img

By

Published : Jul 9, 2019, 3:32 PM IST

Updated : Jul 9, 2019, 3:58 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசு மதுபான கடைகளை நடத்துவதை எதிர்த்து வழக்கறிஞரும் சமூக சேவருமான நந்தினி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார். அதை தடுத்த காவல்துறையினரை எதிர்த்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 27ஆம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் நேரில் ஆஜராயினர். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்கக் கூடாது என்று நீதிபதி சாமுண்டிஸ்வரி பிரபா கூறியதை நந்தினி கேட்காமல் மதுபானம் உணவு பொருளா.. மருத்து பொருளா..என்றும், போதை பொருள் என்றால் அதை விற்கும் அரசு குற்றவாளி அல்லவா.. இதைக் கேட்ட என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று நந்தினியும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய இருவரும் வழக்குக்கு சம்மந்தம் இல்லாத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டதால் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கின் மேல்விசாரணைக்கு நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். "சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போராடுவது சரிதான். போராட்ட முறை தவறானது" என்றும் நந்தினிக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை. 09

சமூக ஆர்வலர் நந்தினி சொந்த பிணையில் விடுவிப்பு!

சிவகங்கை: வழக்குக்கு தொடர்பில்லாத கேள்விகள் கேட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் நந்தினிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Body:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2016
ஆண்டு அரசு மதுபான கடைகளை நடத்துவதை எதிர்த்து
துண்டு பிரசுரம் வினியோகம் செய்த போது காவல்துறை அனுமதி இல்லாமல் வினியோக செய்ய கூடாது என்று தடுத்த காவல்துறையினரை எதிர்த்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக போடப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த மாதம் 27-ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் நந்தினி அவரது தந்தை ஆனந்தன் நேரில்ஆஜர் ஆயினர். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்க கூடாது என்று நீதிபதி சாமுண்டிஸ்வரி பிரபா கூறியதை நந்தினி கேட்காமல் மதுபானம் உணவு பொருளா மருத்து பொருளா என்றும் போதை பொருள் என்றால் அதை விற்கும் அரசு குற்றவாளி அல்லவா இதை கேட்ட என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று
பேசியதால் நந்தினி அவரது தந்தை ஆனந்தன்ஆகிய இருவரும் வழக்குக்கு சம்மந்தம் இல்லாத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டதால் இருவர் மீதும்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கின் மேல்விசாரணைக்கு நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

Conclusion:வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரையும் சொந்த ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார். மேலும் சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும் போராடுவது சரிதான் என்றும் போராட்ட முறை தவறானது என்றும் நந்தினிக்கு அறிவுரை வழங்கினார்.

பேட்டி: குணா ஜோதிபாசு (நந்தினியின் வருங்கால கணவர்)
Last Updated : Jul 9, 2019, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.