ETV Bharat / state

பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலய விழா!

சிவகங்கை: கரோனா காரணமாக, அருள்மிகு சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலய விழா இந்தாண்டும் பக்தர்கள் அனுமதியின்றி மிக எளிமையாக நடைபெற்றது.

பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலய விழா

author img

By

Published : Apr 27, 2021, 8:51 PM IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள அருள்மிகு சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
ஆனால் இன்று(ஏப்.27) அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இல்லாமல் எளிமையான முறையில் பூஜைகள் மட்டும் நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

கட்டுப்பாடுகள் காரணமாக ஆலயத்தின் அருகில் பெரிய தொட்டி வைக்கப்பட்டது. அதில் பக்தர்கள் பால் ஊற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் நேரடியாக சுவாமியை தரிசித்து பால் அபிஷேகம் செய்யமுடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

ஆண்டுதோறும், தமிழ்நாடு மட்டும் அல்லாது உலகின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மிக சிறப்பாக நடைபெற்றுவந்த அருள்மிகு சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலய விழா, இந்த ஆண்டும் கரோனா காரணமாக பக்தர்களின்றி மிக எளிமையாக நடைபெற்றது.

இதையும் படிங்க: இந்தியாவிற்கான விமானங்களை ரத்துசெய்த ஆஸ்திரேலியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.