ETV Bharat / state

தங்கமகனின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா தமிழ்நாடு அரசு? - gold medal

சிவகங்கை: மலேசியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீரரின் கோரிக்கைக்கு மாநில அரசு செவி சாய்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

request to listen to the Government of Tamil Nadu
author img

By

Published : Aug 4, 2019, 6:41 AM IST

மலேசியா நாட்டின் மலாக்கா நகரில் நடைபெற்ற உலக கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஈராக்கை வீழ்த்தி இந்திய அணி பட்டத்தை தட்டிச் சென்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தனர்.

அதில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு சாலைகிராமம் பகுதியைச் சேர்ந்த தனராஜும் ஒருவர். மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதில் இருந்தே கபடி மீது ஆர்வம் கொண்டவர். பள்ளியில் படிக்கும் போது நடத்தப்பட்ட அனைத்து கபடி போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை அள்ளியுள்ளார். இவரது கபடி ஆட்டத்திறமையை கண்டறிந்த ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் உதவி செய்தனர்.

மலேசிய தொடரில் வென்று சொந்த ஊர் திரும்பிய தனராஜுக்கு அப்பகுதி காவல் துறையினர் பொன்னாடை அணிவித்தனர்.

இதனால் படிப்படியாக கபடி ஆட்டத்தில் ஜொலிக்க தொடங்கினார் தனராஜ். அப்படியே கல்லூரி அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று திறமையை வளர்த்துக்கொண்டார்.

மலேசிய தொடரில் வென்று சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, ஊர் மக்கள் மற்றும் அவர் படித்த அரசுப் பள்ளியின் மாணவ, மாணவிகள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர். இதுவே இவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

இவரது வீட்டிற்கு சென்றால் முதலில் வரவேற்பது இவர் வாங்கி குவித்த ஆளுயர கேடயங்களும், பதக்கங்களும் தான். இதனை அடைய தனராஜ் எத்தனை ஆண்டுகாலம் உழைத்திருப்பார்.

தங்கமகனின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு

தமிழகத்தின் எங்கோ ஓர் மூலையில் உள்ள கிராமத்தில் பிறந்து சாதாரண அரசுப் பள்ளியில் படித்து தற்போது இந்திய அளவில் புகழ் பெற்று விளங்கும் தனராஜின் ஒரே வேண்டுகோள் ஏழ்மை நிலையில் இருக்கும் தனக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என்பதே.

தமிழ்நாடு அரசு முன்வந்து அரசுப் பணி வழங்கினால் உதவியாக இருக்கும் என்பதே இவரது கோரிக்கையா உள்ளது.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஆக.03

தங்கமகனின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு?!

சிவகங்கை: மலேசியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரரின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Body:மலேசியா நாட்டின் மலாக்கா நகரில் நடைபெற்ற உலக கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஈராக்கை வீழ்த்தி இந்திய அணி பட்டத்தை தட்டிச் சென்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த மூன்று வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தனர்.

அதில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு சாலைகிராமம் பகுதியை சேர்ந்த தனராஜும் ஒருவர். மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தனரஜுக்கு சிறுவயதில் இருந்தே கபடி மீதுதான் ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும் போது பள்ளியில் நடத்தப்பட்ட அனைத்து கபடி போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை அள்ளினார். இவரது கபடி ஆட்டத்திறமையை கண்டறிந்த ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் இவருக்கு உதவி செய்தனர்.

இதனால் படிப்படியாக கபடி ஆட்டத்தில் ஜொலிக்க தொடங்கினார் தனராஜ். அப்படியே படிப்படியாக கல்லூரி லெவல் போட்டிகளிலும் பங்கேற்று திறமையை வளர்த்துக்கொண்டார்.

மலேசிய தொடரில் வென்று சொந்த ஊர் திரும்பிய அவருக்கு ஊர் மக்கள் மற்றும் அவர் படித்த அரசுப் பள்ளியின் மாணவ, மாணவிகள் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர். இதுவே இவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

இவரது வீட்டிற்கு சென்றால் முதலில் வரவேற்பது இவர் வாங்கி குவித்த ஆளுயர கேடயங்களும், பதக்கங்களும்தான். இதனை அடைய தனராஜ் எத்தனை ஆண்டுகாலம் உழைத்திருப்பார்.

தமிழகத்தின் எங்கோ ஓர் மூலையில் உள்ள கிராமத்தில் பிறந்து சாதாரண அரசுப் பள்ளியில் படித்து தற்போது இந்திய அளவில் புகழ் பெற்று விளங்கும் தனராஜின் ஒரே வேண்டுகோள் ஏழ்மை நிலையில் இருக்கும் தனக்கு மத்திய, மாநில அரசுகள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதே. தமிழக அரசு முன்வந்து இவருக்கு அரசுப் பணி வழங்கினால் இவரைப்போன்ற ஏழை மாணவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்பது இவரது கோரிக்கையாகும். Conclusion:இவரது கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்குமா?.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.