ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு: தமிழக மக்கள் மன்றம் ஆர்ப்பாட்டம்! - Tamil Nadu People's Forum

சிவகங்கை : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் மன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் திறப்பதற்கு எதிர்ப்பு
ஸ்டெர்லைட் திறப்பதற்கு எதிர்ப்பு
author img

By

Published : Apr 29, 2021, 7:50 AM IST

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது அதிகரித்துவருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து, இலவசமாக வழங்குவதாக தெரிவித்ததோடு, ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு பல்வேறு அமைப்புகள், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்றவை ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு இதற்கு இசைவு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டிலும் முக்கிய கட்சிகள் நிபந்தனையுடன், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் நேற்று (ஏப். 28) தமிழக மக்கள் மன்றம் சார்பில் அதன் தலைவரும், மக்கள் நீதி மன்ற காரைக்குடி வேட்பாளர் ச.மி. இராசகுமார் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ஆம் ஆத்மி, தமிழ் தேச மக்கள் கட்சி, பச்சைத்தமிழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழ் தேசிய கலை இலக்கிய பண்பாட்டு கழகம், தமிழிய சிந்தனைக்களம் போன்ற அமைப்புகள் கலந்துகொண்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.