சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அழகுமுத்துக்கோன் பேரவை சார்பாக இரண்டாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று (ஜன.16) நடைபெற்றது.
இதில் சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80 ஜோடி மாடுகள் பங்கேற்று களத்தில் சீறிப்பாய்ந்தன.
8 மைல் தூரம் கொண்ட பெரிய மாட்டிற்கான பந்தயத்தில் 13 ஜோடிகளும், 7 மைல் தூரம் கொண்ட நடு மாடுகளுக்கான போட்டியில் 27 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. அதேபோல் 6 மைல் தூரம் கொண்ட சின்ன மாட்டிற்கான பந்தயத்தில் 40 ஜோடி ஜோடிகள் பங்கேற்றன. பந்தையத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியை சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, மதுரை, ராமநாதபுரம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊர்மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் உற்சவம்