சிவகங்கை: சிவகங்கையை அடுத்த வீராணி கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு புவியரசன், மேகவர்ஷினி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காளீஸ்வரன் - பரமேஸ்வரி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி காளீஸ்வரனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு பிரிந்து சென்றார்.
இந்த நிலையில் திடீரென்று மகன் மீது கொண்ட பாசத்தினால் பரமேஸ்வரி கரோனா தடுப்பூசி போட வந்ததாக சொல்லிக்கொண்டு காளீஸ்வரன் வீட்டில் நுழைந்திருக்கிறார்.
வீட்டிலிருந்த மகனை இழுத்துக்கொண்டு காரில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது புவியரசனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், பரமேஸ்வரியின் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் பரமேஸ்வரியை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 'மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்' - மனித உரிமை ஆணையம்