கரோனா பரவல் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போர்க் கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அனைத்து அமைச்சர்களும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்குடி நகராட்சி அரசு மருத்துவமனை, சூரக்குடி அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாங்குடி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: மறைந்த நீதிபதி நீஷ் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின்