ETV Bharat / state

அக்காவை கொலை செய்த தம்பி: தாய், தந்தையை இழந்த குழந்தைகள்

author img

By

Published : Dec 16, 2021, 5:25 PM IST

சிவகங்கை அருகே உடன்பிறந்த தம்பியே வீடு கட்டிய பிரச்சனையில் அக்காவை கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தந்தை இழந்து இரண்டு சிறுவர்கள் தற்போது தாயையும் இழந்து அனாதையாக நிற்கின்றனர்.

அக்காவை கொலை செய்த தம்பி
அக்காவை கொலை செய்த தம்பி

சிவகங்கை அருகே கோனார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணவனை‌ இழந்த உதயசூரியா. இவருக்குத் திருமணமாகி 9 வயது மற்றும் 15 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், அருகில் உள்ள கல்லூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.

மூன்று பெண்கள், ஒரு ஆண் என ஐந்து பேருடன் பிறந்தவர் உதயசூரியா. இவரின் உடன்பிறந்த சகோதரர் ஆசைகண்ணன் பொறியியல் படித்து மஹாலெட்சுமி என்கிற பெண்ணுடன் திருமணமாகி தற்சமயம் சென்னை மெட்ரோவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கோயில் திருவிழாவுக்காக ஆசைகண்ணனும் அவரது மனைவியும் ஊருக்கு வந்துள்ளனர்.

தகராறு

இதனிடையே, உதயசூரியா தனது ஊரில் உள்ள அனைவருக்கும் பொதுவான இடத்தில் வீடு கட்டியுள்ளார். இதற்குக் கடனாக அவர் தம்பியிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவ்வப்போது உதயசூரியாவிற்கும் தம்பிக்கும் இடையே வீடு கட்டியதில் பணம் மற்றும் இடத்திற்கான தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், திருவிழாவுக்கு கோயிலுக்கு செல்வதற்காக ஆசைகண்ணனும் அவரின் மனைவி மஹாலெட்சுமியும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது, வீட்டிற்குள் வரக்கூடாது என்று உதயசூரியா கூறவே, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அது குறித்து கேட்கச் சென்ற ஆசைகண்ணன் அங்கிருந்த இரும்பு கம்பியால் உதயசூரியாவை தலை மற்றும் கழுத்து பகுதியில் கொடூரமாகத் தாக்கி உள்ளார்.

அக்காவை கொலை செய்த தம்பி

இதில் உதயசூரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அங்கிருந்து தம்பி ஆசைகண்ணன் தப்பிச்செல்ல, தகவலறிந்து அங்குச் சென்ற பூவந்தி காவல்துறையினர் உதயசூரியாவின் உடலைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இக்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாயத்துச் செயலாளரைத் தனது தம்பியே கம்பியால் தாக்கி கொலைசெய்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகள்

இதனைத் தொடர்ந்து கொலை செய்த ஆசைகண்ணனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே தந்தை இழந்து இரண்டு சிறுவர்கள் தற்போது தாயையும் இழந்து அனாதையாக நிற்கின்றனர்.

மேலும், இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், கொலை செய்வதற்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். ஆசைக்கண்ணன் மனைவியையும் கைது செய்ய வேண்டும் என்றும் உதயசூரிய‌ பார்த்த வேலையை இந்த குழந்தைகளை எடுத்து வளர்க்க இருக்கும் அவரின் தங்கைக்குக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பாலியல் புகாரளித்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்: காவலர்கள் மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.