ETV Bharat / state

“வியாபாரந்தான்... ஆனா வாடிக்கையாளர்களுக்கு நல்லது செய்யுறேன்” - கரும்பு பால் வியாபாரி - சிவகங்கை கருப்பு பால் விற்பனை

சிவகங்கை அருகே கரும்பு பால் விற்பனை செய்பவர் அதன் ஆரோக்கியத்தை வாடிக்கையாளர்களுக்கு விளக்கி வருகிறார். வர்ற வாடிக்கையாளரோட மனசு நிறையணும். அதுபோதும்... ஒருதடவை எங்கிட்ட வந்து இத குடிச்சுட்டாங்கன்னா அடுத்து என்னோட வாடிக்கையாளராவே மாறிடுவாங்க என்று அவர் தெரிவித்துள்ளார்.

கரும்பு பால் வியாபாரம்
கரும்பு பால் வியாபாரம்
author img

By

Published : Mar 29, 2022, 9:31 AM IST

சிவகங்கை: கோடை வெயில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே தர்பூசணி, எலுமிச்சம்பழம் சர்பத், மோர், கம்பு மற்றும் கேப்பைக்கூழ் வியாபாரம் சக்கைபோடு போடத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே கரும்புச்சாறு விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிரேஸ்நகர் பகுதியில் 'மூலிகை கரும்பு பால்' என்ற பெயரில் கரும்புச்சாறு விற்கும் கோபால், பிற கரும்புச்சாறு விற்பனையாளர்களைவிட சற்றே வேறுபட்ட முறையில் வாடிக்கையாளர்களைக் கவர்கிறார். நாள்தோறும் சராசரியாக 200 பேர் பருகிவிட்டு வாழ்த்துகிறார்கள் என்கிறார் கோபால்.

அப்படியென்ன அவரது கடையில் வித்தியாசமாக உள்ளது..? ஈடிவி பாரத் சார்பாக உரையாடினோம். “அது ஒன்னும் இல்லீங்க சார்... வெறுமனே கரும்பு பால் மட்டுமே தர்றது இல்லைங்க... வழக்கமா எல்லாரும் எலுமிச்சை, இஞ்சி சேர்ப்பாங்க நான் கூடுதலா மல்லித்தழை, ஓமம், புதினா இதையும் சேத்து அரைச்சு பாலோட சேத்து தர்றேன். ரொம்ப சுவையாவும் இருக்கும். எங்கிட்ட வர்ற வாடிக்கையாளரோட உடலுக்கு என்னால முடிஞ்ச ஒரு உதவிதாங்க சார்” என்கிறார் கோபால்.

கரும்புச்சாறை, கரும்பு பால் என்றே அழைக்கிறார். அதற்கு என்ன காரணம்?, “அதுவும் தாய்ப்பாலுக்கு நிகரானது. நல்ல வெயில் நேரத்துல கவனம் வச்சி அதைக் குடிச்சுப் பாருங்க சார்... அப்போ அதோட மகத்துவத்த நீங்க உணருவீங்க... சாறுன்னு சொன்னா அது சாதாரணமா இருக்கும்... கரும்பு பால்னு சொல்லிப் பாருங்க” என்று நமக்கு வகுப்பெடுக்கிறார் கோபால்.

கரும்பு பால் வியாபாரம்

பல்வேறு தொழில்களைச் செய்துவிட்டு, கடந்த இரண்டு மாதங்களாக 'கரும்பு பால்' தயாரித்து வழங்கும் இந்தத் தொழிலுக்கு வந்தததாகக் கூறும் கோபால், தனக்கு உதவி செய்த நபர்களை நன்றியோடு நினைவுகூர்கிறார். ஒரு குவளை 20 ரூபாய்க்கு வழங்குவதாகக் கூறும் கோபால், குவளை நிறைய தளும்பத் தளும்ப தருகிறார்.

இதற்கு அவர் பதிலளித்ததாவது, “வர்ற வாடிக்கையாளரோட மனசு நிறையணும். அதுபோதும்... ஒருதடவை எங்கிட்ட வந்து இத குடிச்சுட்டாங்கன்னா அடுத்து என்னோட வாடிக்கையாளராவே மாறிடுவாங்க. காரணம் அவங்க தர்ற காசவிட, அவங்களோட உடல்நலன்தான் முக்கியம்னு நான் கருதுறதுதான். நல்லபடியா பொழப்பு ஓடுது சார்” என்கிறார் மனநிறைவோடு.

தான் கடை போட்டிருக்கும் அந்த இடத்தைச் சுற்றி கற்றாழைச்செடிகளை கொத்துக் கொத்தாய் பராமரித்து வளர்த்து வருகிறார். தன்னிடம் வாடிக்கையாளர்களாக வருகின்ற நபர்களிடம் கற்றாழையின் அருமை பெருமைகளைச் சொல்லி, வேண்டும் நபர்களுக்கு இலவசமாய் வழங்கி மற்றொரு சேவையும் செய்கிறார். “காசு இன்னிக்கி வரும் நாளைக்கு போகும். ஆனா, மனுசங்கதான் நம்மகூட என்னைக்கும் இருப்பாங்க. அவங்க நல்லா இருந்தாத்தான் அவங்கள சார்ந்து வாழுகிற நானும் நல்லாருக்க முடியும். இல்லீங்களா சார்..?” என்கிறார் முத்தாய்ப்பாக.

ஏதாவது ஒரு தொழில் செய்து வருவாய் ஈட்டவேண்டும், பணம் சம்பாதித்து அதை பெருக்கவேண்டும் என நினைக்கும் இந்த கால கட்டத்தில் சிவகங்கையில் ஒருவர் கரும்பு பாலை விற்று, அதன் ஆரோக்கியத்தை வாடிக்கையாளர்களுக்கு விளக்கி வரும் கோபாலின் இந்த செயல் வாடிக்கையாளர்களை மட்டுமின்றி காண்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் பேருந்தில் ஆபத்தான பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.