ETV Bharat / state

சிவகங்கையில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு மிரட்டல் - Sivagangai

சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக தொப்பி சின்னத்தில் போட்டியிடும் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சரவணன் என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தனிடம் மனு அளித்துள்ளார்.

தொப்பி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்
author img

By

Published : Apr 9, 2019, 2:41 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார்.

இவர் சிவகங்கை மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு அளித்திருந்த நிலையில், அவரது மனு தேர்தல் அதிகாரிகள் மூலம் ஏற்கப்பட்டு அவருக்கு தொப்பி சின்னமானது ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இவருடைய பவர் ஏஜெண்டாக உள்ள சதீஷ் என்பவர் தேர்தல் வேலை காரணமாக சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கடந்த 1ஆம் தேதி வந்துவிட்டு சென்றபோது, அவரை கொல்லங்குடி அருகே வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் உங்கள் வேட்பாளர் தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொப்பி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்

இதையடுத்து, தொப்பி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சரவணன் தனக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வாக்கு சேகரிக்க பாதுகாப்பு வழங்கக்கோரி இன்று சிவகங்கை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெயகாந்தனிடம் மனு அளித்தார்.

சிவகங்கை     ஆனந்த்
ஏப்ரல்.08

தொப்பி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல். பாதுகாப்பு கோரி தேர்தல் அலுவலரிடம் மனு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக தொப்பி சின்னத்தில் போட்டியிடும் சரவணன் என்பவருக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறி தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ஜெயகாந்தனிடம் மனு அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். 

இவர் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு அளித்திருந்த நிலையில் அவரது மனு தேர்தல் அதிகாரிகள் மூலம் ஏற்கப்பட்டு அவருக்கு தொப்பி சின்னமானது ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இவருடைய பவர் ஏஜெண்டாக உள்ள சதீஷ் என்பவர் தேர்தல் வேலை நிமித்தமாக சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கடந்த 1ஆம் தேதி வந்து திரும்பும்போது கொல்லங்குடி அருகே வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் உங்கள் வேட்பாளரை தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க கூடாது என மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சரவணன் தனக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வாக்கு சேகரிக்க பாதுகாப்பு வழங்க கோரி இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்ததுடன் ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெயகாந்தனை சந்தித்து மனு அளித்தார்.

பேட்டி - சரவணன் (சுயேச்சை வேட்பாளர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.