சிவகங்கை: தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இறுதி நாளான இன்று (பிப். 4) அனைத்துக் கட்சி சார்பிலும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 20ஆவது வார்டில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 22 வயதே ஆன எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கும் மாணவி பிரியங்கா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தது புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியது. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
நான் வெற்றி பெற்றபின் வார்டுபகுதி மக்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளில்கூட என்னைத் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவித்தால், உடனடியாக அதை நிவர்த்தி செய்து தருவேன்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொலைசெய்யப்பட்ட திமுக நிர்வாகியின் தாய் தேர்தலில் போட்டி