ETV Bharat / state

தனியாரை முறியடிக்க அரசு பள்ளிகளில் புதிய திட்டம் -அமைச்சர் பாஸ்கரன்! - அமைச்சர் பாஸ்கரன்

சிவகங்கை: தனியார் பள்ளிகளை முறியடிக்கவே அரசு பள்ளிகளில் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது என காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

தனியாரை முறையடிக்க அரசு பள்ளிகளில் புதிய திட்டம் -அமைச்சர் பாஸ்கரன்!
author img

By

Published : Jun 27, 2019, 7:44 PM IST

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவில் காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு சுமார் 16 ஆயிரம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.

இதனையடுத்து விழாவில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், மாணவர்களின் நலனுக்காக லேப்டாப், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் இவை அனைத்தும் தனியார் பள்ளிகளை அரசு பள்ளி மாணவர்கள் முறியடிக்கவே என தெரிவித்தார்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூன்.27

தனியார் பள்ளிகளை முறியடிக்கவே அரசு பள்ளிகளில் பல்வேறு புதிய திட்டங்கள் - காதி அமைச்சர் பாஸ்கரன் பேச்சு!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் பேசிய காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தனியார் பள்ளிகளை முறியடிக்கவே அரசு பள்ளிகளில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் உத்தரவில் கல்வி அமைச்சர் செய்துவருகிறார் என மாணவர்கள் மத்தியில் பேசினார்.

Body:சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவானது காதி கிராம தொழில்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 11ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 16 ஆயிரம் மாணவ மாணவியருக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜெயக்காந்தன், மானாமதுரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பாலுமுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், மாணவர்களுக்கு லேப்டாப், மிதிவண்டி, என பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மாணவர்கள் பயில நமது அரசு செய்துவருகிறது என்றும் ஆரம்ப கல்வியிலேயே ஆங்கில வழிக்கல்வியை புகுத்தி புரட்சிகரமான திட்டங்களை நமது உத்தரவின் பேரில் நமது கல்வி அமைச்சர் செய்துவருகிறார் என்றார்.

மேலும் மாணவர்கள் அதனை பயன்படுத்தி ஒழுக்கமாகவும் நல்ல பழக்கவழக்கத்துடனும் கல்வி கற்க வேண்டும் என்றும் பேசியதுடன் அரசு உங்களுக்காக பலகோடி ரூபாயை செலவு செய்துவருகிறது என்றும் தனியார் பள்ளிகளை முறியடிக்கவே தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அரசு பள்ளிகளில் கொண்டுவருகிறது என்றும் பேசினார்.

Conclusion:இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.