சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் சோதனைச் சாவடியில் தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தக் கோரியும் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்றுமடக்கிப் பிடித்தனர்.
பின்பு, லாரியைச் சோதனை செய்ததில் 380 மூட்டைகள் ரேசன் அரிசி இருப்பதும், அது கேரள மாநிலம் கண்ணனூருக்கு கடத்தப்படுவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த ரேசன் அரிசி மூட்டைகளை லாரியோடு பறிமுதல் செய்த பறக்கும் படையினர், ஓட்டுநரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.