சிவகங்கை: காரைக்குடி காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் நேற்று தேவகோட்டையைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் வைரவன் ஆகிய இருவரும் காரில் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற கழனிவாசலைச் சேர்ந்த திருக்குமார் என்பவருடன் சாலையில் வழிவிடுதலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. முந்தி சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திருக்குமார் ராஜேஷின் காரை முந்திச் சென்று வழிமறித்து அவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த காரில் வந்த வைரவன் மற்றும் ராஜேஷ் காரை விட்டு இறங்கி திருக்குமாரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, தரையில் சுட்டுக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைக் கண்டு அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜேஷ் மற்றும் வைரவன் ஆகியோரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்
இது சம்பந்தமாக நேற்று முன்தினம் வைரவன் மற்றும் ராஜேஷை பிடித்து அவர்களிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் தீவிர விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் படிகத்தால் ஆன எடைக்கல் கண்டெடுப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வியப்பு!
விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து துப்பாக்கியை வாங்கியதாகவும் தேவகோட்டையில் தனது வீட்டில் மேலும் இரண்டு கை துப்பாக்கிகள் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர். மேலும் அவர்கள் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுதர்சன் என்பவரிடம் துப்பாக்கி வாங்கியதாக விசாரணையில் கூறியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் தேவகோட்டை சென்று இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
இதனை பதுக்கி வைக்க உதவியதாக பிரசாத் மற்றும் மணிகண்டன் ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் காரைக்குடி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மதுரை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்குடியில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: என்ன சிலை என்று தெரியாமல் வணங்கிய மக்கள்.. ஆய்வில் வெளிவந்த பொக்கிஷம்!