ETV Bharat / state

கொந்தகை அகழாய்வில் 2,000 ஆண்டுகள் பழமையான வாள் கண்டெடுப்பு

கீழடி அருகே கொந்தகை அகழாய்வின்போது முதுமக்கள் தாழி ஒன்றில் 40 செ.மீ. நீளமுள்ள இரும்பினாலான வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடி - கொந்தகை அகழாய்வில் இரும்பு வாள் கண்டெடுப்பு...!

author img

By

Published : Sep 29, 2022, 6:58 PM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல்துறையின் சார்பாக 8ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கீழடி, கொந்தகை, அகரத்திலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழடி - கொந்தகை அகழாய்வில் இரும்பு வாள் கண்டெடுப்பு

இந்த நிலையில், கொந்தகையில் நடைபெற்ற இன்றைய அகழாய்வின்போது முதுமக்கள் தாழியன்றில் கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட குவளைகளுடன் 40 செ.மீ. நீளமுள்ள இரும்பால் செய்யப்பட்ட வாள் கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்பினாலான பொருட்களை அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த வாள் அப்பகுதியைச் சேர்ந்த போர் வீரன் உடையதாக இருக்கலாம். அந்த வீரன் இறந்த பிறகு அவரது உடலுடன் வாள் தாழியினுள் வைத்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை மாமன்றத்தில் தெரிவிக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில்லை - குமுறும் மாமன்ற உறுப்பினர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.