ETV Bharat / state

காப்பீட்டு அட்டை வாங்க ஆட்சியர் அலுவலகம் வந்த கரோனா நோயாளி! - முதலமைச்சர் காப்பீட்டு திட்டம்

சிவகங்கை: முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீடு அட்டையைப் பெறுவதற்கு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கரோனா நோயாளியால் அலுவலர்கள் மிரட்சி அடைந்தனர்.

CM's Comprehensive Insurance
CM's Comprehensive Insurance
author img

By

Published : May 22, 2021, 2:07 PM IST

சிவங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபிரபு. இவர், மதுரை மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ராஜபிரபுவிடம் காப்பீட்டுக்கான அட்டை இல்லாத காரணத்தால், புதிய அட்டை பெற நோயாளியின் உறவினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள காப்பீட்டு அலுகத்தில் சென்று முயற்சி செய்துள்ளார். அங்கிருந்த அலுவலர்கள் நோயாளி நேரில் அலுவலகம் வரவேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதனால், கரோனா நோயால் பாதிக்கப்பட்ட ராஜபிரபு மதுரையில் இருந்து சிவகங்கைக்கு அவசர ஊரதியில் சுமார் 50 கி.மீ அழைத்து வரப்பட்டார். இதனைக் கண்ட அலுவலர்கள் கரோனா நோயாளியான ராஜபிரபுவை பார்த்து அச்சமடைந்து, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு தகவல் தெரிவிக்க, அங்கு வந்த ஆட்சியர் நோயாளிக்கு உரிய சிகிச்சையளிக்க உடனடியாக உத்தரவிட்டார்.

தொடர்ந்து கரோனா நோயாளியை அலைக்கழித்த காப்பீட்டு அலுவர்களை எச்சரித்த ஆட்சியர், இதுபோல் நோயாளிகளை அவதிக்குள்ளாக்க கூடாது என அறிவுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.