ETV Bharat / state

காரைக்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்! காவல் துறை  தடியடி - sivaganga

சிவகங்கை: காரைக்குடி அருகே கோட்டையூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க காவல் துறையினர்  தடியடி நடத்தினர்.

அடித்து நொறுக்கப்பட்ட வாகனம்
author img

By

Published : Jun 17, 2019, 11:54 AM IST

Updated : Jun 17, 2019, 12:10 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில் இரு சமுதாயத்தினரிடையே சுடுகாட்டில் எல்லைக்கல் ஊன்றுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர், இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆலோசனையில் ஈடுபட்ட காவல்துறையினர்
ஆலோசனையில் ஈடுபட்ட காவல்துறையினர்

ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தடுக்க முற்பட்ட காவல் துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதனையடுத்து கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

வீட்டினுள் இருந்து கற்களை வீசிய கலவரக்காரர்களை காவல் துறையினர் வீடு புகுந்து கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கலவரத்தில் ஈடுப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

கலவரத்தின் போது வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள்
கலவரத்தின் போது வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள்

இதன் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கலவரம் பரவாமல் இருக்க கோட்டையூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் 59 பேர் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்

சிவகங்கை   ஆனந்த்
ஜூன்17

காரைக்குடி அருகே கோட்டையூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸார்  தடியடி - 59 பேர் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரில், இரு சமுதாயத்தினரிடையே சுடுகாட்டில் எல்லைக்கல் ஊன்றுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. தடுக்க முற்பட்ட போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டது.இதனையடுத்து கலவரக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

மேலும் கற்கல் வீசியதில் வீடுகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. கலவரக்காரர்களை போலீஸார் வீடு, வீடாக தேடி,வீட்டிற்குள் பதுங்கி இருந்து கற்களை வீசியவர்களை வீட்டிற்குள் புகுந்து கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கலவரத்தில் ஈடுப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். 

இதன் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கலவரம் பரவாமல் இருக்க கோட்டையூர் மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் 59 பேர் மீது வழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Last Updated : Jun 17, 2019, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.