ETV Bharat / state

மனநலம் பாதித்த மகனுடன் வாழும் தாய்க்கு புத்தாண்டு பரிசாக வீடு - ராணுவ வீரர்களின் மனிதநேய சேவை! - மன நலம் பாதித்த மகனுடன் வாழும் தாய்க்கு புதிய வீடு கட்டிக் கொடுத்த ராணுவ வீரர்கள்

புத்தாண்டு பரிசாக மனநலம் பாதித்த மகனுடன் வாழும் தாய்க்கு ரூ.36 ஆயிரம் மதிப்பில் புதிய வீட்டை நான்கு நாட்களுக்குள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கட்டிக் கொடுத்துள்ளனர்.

புதிய வீடு கட்டிக்கொடுத்த ராணுவ வீரர்கள்

author img

By

Published : Jan 2, 2022, 10:17 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டு ராணுவத்தில் பணியாற்றும் 200 வீரர்கள் 'வைகை பட்டாளம் அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவனத்தை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.

தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவு அளித்து, வீடு இல்லாதோருக்கு வீடு கட்டிக் கொடுத்து வருகின்றனர். கிராமங்களில் மரக்கன்றுகள் நட்டும் சேவை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே உள்ள காடனேரி கிராமத்தில் போதிய வருமானம் இன்றி மனநலம் பாதிக்கப்பட்ட, தனது மகனுடன் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார் என்பது இவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து வளர்மதியின் கோரிக்கையை கேட்டு அவருக்கு ரூ.36 ஆயிரம் செலவில், புதிய வீட்டினை நான்கு நாட்களுக்குள் கட்டி முடித்து புத்தாண்டுப் பரிசாக அவருக்கு வழங்கினர்.

புதிய வீடு கட்டிக்கொடுத்த ராணுவ வீரர்கள்

உறவினர்களும், அரசும் தங்களை கைவிட்ட நிலையில், ராணுவ வீரர்கள் தானாக முன்வந்து தங்களுக்கு வீடுகட்டிக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறி, வளர்மதி அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

எல்லையில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் காடனேரி கிராமத்தில் தன்னலம் பாராமல் உதவி செய்துவருவது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கடன் பிரச்னையால் விபரீதம் - மனைவி, மகன்களை கொன்றுவிட்டு, தந்தை தற்கொலை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.