சிவகங்கையில் நேற்று நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டமானது மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் மக்களவைத் தேர்தல், மானாமதுரை சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக நிர்வாகிகளை மீண்டும் கட்சிக்குள் இழுக்க வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.