சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரங்கனூர், கொள்ளேபநாயக்கனூர் பகுதியிலிருந்து, வெள்ளார் செல்லும் பாதை தற்பொழுது மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை நகரப்பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் இவ்வழியாக வெள்ளாருக்கு செல்வதற்கு குறுக்கு வழிப்பாதையாக இருப்பதால் இந்த சாலை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்துவருகிறது.
இதையடுத்து இந்த சாலையை சீரமைத்து கொடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு, அப்பாகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுபடி, இன்று அப்பகுதியில் பூமி பூஜை நடைபெற்று புதியதாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் மேச்சேரி அதிமுக ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான சந்திரசேகரன், குறிஞ்சி உழவர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் சாலை புதிதாக அமைத்து கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அப்பகுதி மக்கள், இதன் மூலம் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை நகரப் பகுதிக்கு விரைவாக எடுத்துச் சென்று விற்பனை செய்ய உறுதுணையாக இருபத்தோடு, எங்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.