சேலம்: 2017ஆம் ஆண்டு முன்பு வரை ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் ஆகிய தொழில்களை நடத்தி வந்தது 'வின்ஸ்டார் இந்தியா' நிறுவனம். இந்த நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மோசடி வழக்கு தொடர்பாக நிறுவனத்தைச் சேர்ந்த 30 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட 30 பேர் மீதும் தனித்தனியாக 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, காவல்துறையினர் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைக் குற்றவாளிகளுக்கு வழங்க உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வின்ஸ்டார் இந்தியா என்ற நிறுவனம் சிவகுமார் என்பவரால் 2017ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் ஆகியவை தொடங்கி குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டது. மேலும், வீட்டுமனை பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாகவும் சிவக்குமார் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து விபத்து; இருவர் உயிரிழப்பு!
இதை நம்பி சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து 1686 பேர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் உரியவர்களுக்கு அவர் பணம் தராததால் இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் 2017ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் 30 பேருக்கு தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் மொத்தம் 15 லட்சம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையைக் காவல் துறையினர் இன்று தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: தேனியில் வீட்டுக் கடன் செலுத்தவில்லை என தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் செயலால் அதிர்ச்சி!