ETV Bharat / state

காதல் திருமணம் செய்த மகளுக்கு துணை போனதால் ஆத்திரம்.. சொத்துக்காக கணவனை கடத்தி மனைவி சித்ரவதையா? என்ன நடந்தது? - உயர் நீதிமன்றம்

சேலத்தில் வலுக்கட்டாயமாக காரில் தூக்கிசென்ற தனது தந்தையை, தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மைய நிர்வாகிகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி மீட்டுள்ளார்.

kidnap
சொத்துக்காக தனது கனவனை கடத்திய மனைவி..உடந்தையாக மகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 9:09 AM IST

சொத்துக்காக தனது கனவனை கடத்திய மனைவி..உடந்தையாக மகள்

சேலம் மாநகர் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் குளிர்பானம் விற்பனை முகவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், பிரேமா, மலர்விழி, நந்தினி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் மலர்விழி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறி உள்ளார்.

மலர்விழி காதல் திருமணம் செய்த காரணத்தினால் தாய் சந்திரா, சகோதரிகள் இருவரும் மலர்விழியின் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தந்தை நாராயணனுடன் அடிக்கடி மலர்விழி தொலைபேசி மூலமாக பேசி வந்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணனின் மனைவி சந்திரா மற்றும் இரண்டு மகள்கள் சேர்ந்து நாராயணனை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நாராயணன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது குளிர்பானங்கள் விற்பனைக்காக, ஒரு கடையின் முன்பாக நின்று கொண்டிருந்த போது, நாராயணனை, தீபக் என்ற நபர் மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து காரில் வலுக்கட்டாயமாக அடித்து தூக்கி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாராயணனின் மகள் மலர்விழி காவல் துறையினரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து உள்ளார். பின்னர், காவல் துறையினர் விசாரணையில் நாராயணனை (New life recovery foundation) தனியார் மீட்பு மையத்தில் வைத்து இருப்பதாக தகவல் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் மலர்விழி நேரடியாக தந்தையை சந்திக்க முயற்சித்தபோது, அனுமதி அளிக்காததால் சேலம் மாநகர காவல் துறையினர் மற்றும் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அங்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி, இது தொடர்பாக மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பின்னர், மனுவை விசாரித்த நீதிபதிகள் நாராயணனை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி, காவல் துறையினர் நேரடியாக ஆஜர்படுத்தினர்.

பின், நாராயணனின் விருப்பப்படி அவரது மகளுடன் நீதிமன்றம் அனுப்பி வைத்தது. இந்த நிலையில் நாராயணன் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் தந்தை கடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் துன்புறுத்திய வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை வைத்து போலீசார் தனியார் போதை மீட்பு மையத்தின் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய நாராயணன், "தனியார் மீட்பு மையத்தில் தன்னை கடந்த 13 நாட்களாக வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், முறையாக உணவு வழங்காமலும், இருட்டு அறையில் அடைத்து, பல மாத்திரைகளை கொடுத்து மயக்க நிலையை ஏற்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும், தன் மீது இருக்கும் சொத்துகளை எழுதி வாங்கியதாகவும், தொடர்ந்து தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும், மேலும் தன்னை பணம் கொடுத்து தீபக் என்பவரிடம் கடத்த சொன்னது தனது மனைவி மற்றும் மகள்கள் தான் எனவும் நாரயணன் கூறி உள்ளார்.

எனவே தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோன்று தனியார் மீட்பு மையத்தில் அனைவருக்கும் மாத்திரைகள் கொடுத்து கொடுமைப்படுத்துவதாகவும், இந்த மீட்பு மையம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் நாராயணம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜக பிரமுகர் கொலை விவகாரம்: விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.