ETV Bharat / state

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - Welfare Program Assistance Ceremony in Salem

சேலம்: முதலமைச்சரின் சிறப்பு குறைத் தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
author img

By

Published : Nov 17, 2019, 2:38 AM IST

சேலத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விழாவில் ஆட்சியர் சி.அ.ராமன் பேசும்போது, 'முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு பெறப்பட்ட 56ஆயிரத்து 267மனுக்களில் 26ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை' என்றார்.

முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தொடர்ந்து பேசிய அவர், 'சேலத்தில் யாரெல்லாம் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார்களோ அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாகள் வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்து 612 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 188 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 42 பயனாளிகளுக்கு சமூக நலத்துறையின் சார்பில் இலவச தையல்இயந்திரம் என மொத்தம் ஆயிரத்து 842 பயனாளிகளுக்கு ரூ.2.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும்' அவர் கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் விருதுநகரில் முப்பெரும் விழா: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு!

Intro:Body:

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரின்
சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர், பூசாரிப்பட்டி நரசூஸ் சாரதி தொழில்நுட்ப கல்லூரியில் ஓமலூர்
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கான முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்
கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர்சி.அ.ராமன், தலைமையிலும், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.வெற்றிவேல்
முன்னிலையிலும் இன்று நடைபெற்றது.

இந்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்
கடந்த 19.08.2019 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, நங்கவள்ளியில்
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் சிறப்பு
குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம்,
கொங்கணாபுரத்தில் கடந்த 09.11.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும்
திட்டம் துவக்கி வைக்கப்பட்டு பெறப்பட்ட 56,267 மனுக்களில் 26,000 மனுக்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பெறப்பட்ட மனுக்களில் தள்ளுபடி செய்யப்பட்ட
மனுக்கள் மீது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை தலைமைச்
செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு
குறைதீர்க்கும் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் மாதாந்திர உதவித்தொகை கேட்டு வரப்பெற்ற
பல்வேறு மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் தகுதி உடையதாக இல்லாமல் இருந்தது. அதற்கு
என்ன காரணம் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆய்வு செய்தார்கள்.
அதன் அடிப்படை காரணம் ரூ.50,000/- சொத்து மதிப்பிற்கு மேல் இருந்தால் மாதாந்திர
ஓய்வூதியத்திற்கு தகுதி இல்லாத பயனாளியாக எண்ணப்படுகிறது. இந்த சொத்து மதிப்பு
காரணத்தால் தகுதியுடைய பயனாளிக்கு ஓய்வூதியம் கிடைக்க தடையாக உள்ளதை ஆய்வு செய்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாதாந்திர ஓய்வூதிய உதவித் தொகை பெற
குறைந்தபட்ச சொத்து மதிப்பினை ரூ.50,000/-இல் இருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்தி
உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் ஆய்விற்கு
எடுத்துகொள்ளப்பட்டு தகுதியுடைய நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க ஒரு சிறப்பான

இரண்டாவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் யாரெல்லாம்
வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார்களோ அவர்கள் வாழக்கூடிய இடம் புறம்போக்கு
நிலமாக இருந்தால் அவர்களுக்கு உடனடியாக நத்தமாக மாற்றி வீட்டுமனைப்பட்டாகள் வழங்க
வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கை
மனுக்களுக்கு தீர்வுகாண சிறப்பான திட்டமாக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்
அமைந்துள்ளது. விடுப்பட்ட மனுக்கள் மீண்டும் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள
அனைத்துத் துறைகளின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலன் கருதி, குடிமராமத்து
திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்களை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக
வளர்ச்சித்துறையின் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், மதகுகள் சீரமைக்கப்பட்டு 2 மாத காலமாக
பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம்
உயர்ந்துள்ளது. இத்திட்டம் விவசாயிகள் பயனடையும் மிக சிறப்பான திட்டமாகும்.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்களை பெற்று
அம்மனுக்கள் மீது தீர்வு காண மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அவ்வாறு பெறப்பட்ட மனுகளின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளின் பேரில் இன்றைய தினம்
ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 1,612 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 188
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 42 பயனாளிகளுக்கு சமூக நலத்துறையின்
சார்பில் இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 1,842 பயனாளிகளுக்கு ரூ.2.19 கோடி மதிப்பிலான
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பேசினார்கள்.

Conclusion:
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.