சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ளது சத்திரம் பேருந்து நிலையம். இங்கு இன்று அதிகாலை சேலம் - மேட்டூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே சேலம் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
குடிநீர் குழாய் உடைந்து 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மாநகராட்சி அலுவலர்கள் சரி செய்ய வராததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலந்தது. மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மக்களை வாட்டிவதைத்து வரும் நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சரி செய்யாதது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.