ETV Bharat / state

இடியும் நிலையிலுள்ள துணை சுகாதார நிலையத்தைப் புதுப்பிக்க கிராம மக்கள் கோரிக்கை!

சேலம்: பிச்சம்பாளையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தைச் சீரமைத்து, புதுப்பித்து கட்டித் தரவேண்டும் வேண்டும் என்று அந்த ஊர்மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

villagers-demand-renovation-of-thunderstorm-primary-health-center

author img

By

Published : Sep 8, 2020, 3:30 PM IST

Updated : Sep 20, 2020, 5:53 PM IST

சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள பிச்சம்பாளையத்தில், 1986ஆம் ஆண்டு 'டேனிடா' நல்வாழ்வுத் திட்டத்தின்கீழ், துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு துணை சுகாதார நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் இக்கட்டடத்தின் உள்பகுதியிலுள்ள அறைகள் நெடுங்காலமாக பூட்டப்பட்டு, அதிலுள்ள ஜன்னல்கள் துருப்பிடித்தும், உள்பகுதியில் புதர் மண்டியும் கிடக்கிறது. மேலும் அங்கு அவ்வப்பொழுது சமூகவிரோதிகள் ஒன்றுகூடி மது அருந்தி, காலியான மதுப்பாட்டில்களை வீசிச்செல்வதால், அப்பகுதி முழுவதும் குப்பை கூளமாகக் காட்சியளிக்கிறது என பிச்சம்பாளையம் ஊர் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

புதர் மண்டிய நிலையில் சேதமடைந்துள்ள கட்டடம்

இந்நிலையில் அரசு துணை சுகாதார நிலையத்தின் முன்புறத்திலுள்ள இரு அறைகள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. வாரம் ஒருமுறை, செவிலியர் துணை சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி, தாய்மார், பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சேவைகளை அளித்து வருகின்றனர். சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் பிச்சம்பாளையம் கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவை என்றால், இந்த அரசு துணை சுகாதார நிலையத்தின் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்படமுடியாத சூழல் இருப்பதாகவும் ஊர் மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கூறுகையில்,"கடந்த இருபது ஆண்டுகளுக்கும் முன்பு வரை இந்த அரசு துணை சுகாதார நிலையத்தில் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட அவசர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தற்போது வாரம் ஒருமுறை மட்டுமே மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. அவசர மருத்துவ உதவி வேண்டும் என்றால், எங்கள் கிராமத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தள்ளி உள்ள சேலம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி ஆகியப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தான் செல்ல வேண்டும்.

இடியும் நிலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்

அதிலும் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்துள்ள ஏழை மக்கள் அரசு மருத்துவமனை உதவி கிடைக்காமல் பிச்சம்பாளையத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். அவசர மருத்துவ உதவிக்குக்கூட பல மணி நேரம் பயணம் செய்து தான் பெற வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக அரசு இந்த விஷயத்தில் கவனம் எடுத்து புதிய கட்டடம் கட்டி, மருத்துவ சேவையைத் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயா முருகேசன் கூறுகையில், "ஊராட்சி நிர்வாகம் தற்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிச்சம்பாளையத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை, புதியதாக கட்டித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

இடியும் நிலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைப் புதுப்பிக்க கிராம மக்கள் கோரிக்கை

துணை சுகாதார நிலையத்தின் ஆபத்தான நிலை குறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நிர்மல் சன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தோம். அவர் கூறுகையில், 'நீங்கள் குறிப்பிடுகிற அரசு துணை சுகாதார நிலையம் டேனிடா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டது. அதன் தற்போதைய நிலை குறித்தும் எங்களுக்குப் புகார் வந்துள்ளது. பழமையான கட்டடத்தை இடித்துவிட்டு புதியதாக கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சுகாதாரத்துறைச் செயலருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம். மிக விரைவில் பிச்சம்பாளையம் அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்படும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிவகளை அகழ்வாராய்ச்சியில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருள்கள் கண்டுபிடிப்பு

Last Updated : Sep 20, 2020, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.