சேலம் அமரகுந்தி அடுத்துள்ள உப்பாரப்பட்டி கிராமத்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அப்பகுதி, சிகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு இலவச டியூஷன், உடற்கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

நோய் தொற்று ஏற்படும் சவாலான இந்தசூழ்நிலையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிராமத்து மக்களின் துணையோடு, ஊர் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன், தங்கள் அலுவல் பணிகளை விட்டு மாணவர்களில் கல்விக்கு இளைஞர்கள் உதவி வருகின்றனர்.
சுமார் 10 மாணவர்களைக் கொண்டு தொடங்கிய இவ்வகுப்புகள், இன்று 70 மாணவர்களை கொண்டு நடைப்பெற்று வருகிறது. காலையும் மாலையும் உடற்பயிற்சி, புதிய முறையில் கல்வி என்று தினமும் மாணவர்களின் உடல்நலமும் பேணப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் கல்வியில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும், முன்னேற்றம் ஏற்படுவதாக பெற்றோர் பெருமிதம் கொள்கிறார்கள்.