ETV Bharat / state

சேலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை: மக்கள் உயிரைக் காக்க வலியுறுத்தி விசிக ஆர்ப்பாட்டம் - விசிக ஆர்ப்பாட்டம்

சேலம்: மத்திய, மாநில அரசுகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விசிகவினர் முகத்தில் பாலித்தீன் பைகளை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: மக்கள் உயிரைக் காக்க வலியுறுத்தி விசிக ஆர்ப்பாட்டம்

author img

By

Published : May 24, 2021, 4:00 PM IST

கரோனா இரண்டாம் அலையின் வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் நம்பிக்கை அளிக்கிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று (மே.23) ஒரே நாளில் 966 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5,683 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த மாவட்டத்தில் அதிகரித்துவரும் உயிர் இழப்புக்கு அடிப்படையான காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையாக உள்ளது. இந்த பற்றாக்குறையைப் போக்குவதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், இன்னும் நிலைமை சீராகவில்லை.

இந்நிலையில், சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் காஜா மைதீன் தலைமையில் விசிகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை: மக்கள் உயிரைக் காக்க வலியுறுத்தி விசிக ஆர்ப்பாட்டம்

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தலை மற்றும் முகத்தை பாலித்தீன் பையால் மூடியவாறு, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையை நீக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து, மாவட்டப் பொருளாளர் காஜாமைதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'அமைச்சர்கள் உள்ள மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. சேலம் மாவட்டத்தில் அமைச்சர் யாரும் இல்லை என்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக சந்தேகம் எழுகிறது. மாவட்டத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேச்சேரி ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆனால், சேலம் மாவட்டத்திற்கு அனுப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: தளர்வுகளற்ற ஊரடங்கு: இயல்பு நிலையில் இயங்குகிறதா சென்னை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.