சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கீழ்சின்னாக்கவுண்டம்பட்டி என்ற பகுதியில் பழனிசாமி (56) என்ற விவசாயி வசித்துவருகிறார். நேற்று மதியம் தன்னுடைய தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாய கிணற்றின் அருகே பழனிசாமி அருகே சென்றுள்ளார்.
அப்போது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக அவர் கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாரமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவல் துறையினர் ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாரமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் விசாரணை நடத்திவருகிறார்.
இதையும் படிங்க: வீட்டு மாடியில் இளைஞர் சடலம்: கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை