சேலம் அருகே இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோய் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக வேலையில்லாமல் இருவரும் மாநகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை31) காலை இருவரும் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் உயிரிழந்து கிடந்த இடத்தில் கிடைத்த குளிர்பான பாட்டில்களை கொண்டு இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணத்தால் இறந்தார்களா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஏழு மாதங்களில் 16 யானைகள் உயிரிழப்பு..." கோவை வனப்பகுதியில் என்ன நடக்கிறது?