ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த முருகன் மற்றும் அன்பு ஆகிய இருவரும் செர்ரி சாலையை அடுத்துள்ள மரவனேரிப் பாதை வழியே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, கோவை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த கோவை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் முருகன் மற்றும் அன்பு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய இவர்களை அந்த வழியே வந்த பொதுமக்கள் காப்பாற்ற முயன்றனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்புகொண்டுள்ளனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. இதனால், மீண்டும் மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கான அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டது. இருப்பினும், வாகனம் விரைவாக வந்தபாடில்லை என தெரிகிறது.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தது. படுகாயமடைந்த முருகனையும் அன்பையும் ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : அமைச்சர் கருப்பணனுக்கு ’டங் சிலிப்’ - சொல்கிறார் செல்லூரார்!