ETV Bharat / state

'மக்களின் உணர்வுகளை முதலமைச்சர் மதிப்பதில்லை..!' - டிடிவி தினகரன் - எட்டு வழி சாலை

சேலம்: "தேர்தல் முடிந்ததும் எட்டு வழிச் சாலை கட்டாயமாக அமைக்கப்படும் என்று கூறியதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு சிறிது கூட முதலமைச்சர் மதிப்பதில்லை என்று தெரிகிறது" என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : Jul 16, 2019, 10:32 PM IST

சேலத்தில் அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீட் தேர்வில் தமிழ்நாட்டில் விதிவிலக்கு பெற்று தராமல், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு இணக்கமாக இருக்கிறோம் என்று கூறிக் கொள்வதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உட்பட ஐந்து மாவட்ட விவசாயிகள் பாதிக்கும் வகையில் எட்டு வழி சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியபோது, மேடையில் அமைதியாக இருந்துவிட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்டாயமாக எட்டு வழி சாலை அமைக்கப்படும் என்று கூறுகிறார். எங்கே அவர் மக்களின் உணர்வுகளை மதித்தார்? என கேள்வியெழுப்பிள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,"மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. விபரீத ராஜ யோகம் என்றுதான் கூற வேண்டும். அவர்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் பாஜகவுடன் பேசி துணை சபாநாயகர் பதவி வாங்கலாம் என்றுதான் திமுகவினர் நினைப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் அதிமுகவிற்கு இருக்கும் தோல்வி பயம்தான் காரணம். அடுத்ததாக பருவ மழை, புயல் வந்துவிடும் என்று காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தள்ளி போட்டு கொண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் சென்று விடுவார்கள்" என்று தெரிவித்தார்.

Intro:8 வழி சாலை திட்டம் , ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற விவசாயிகள் மக்களை பாதிப்படையும் திட்டங்களை தமிழக அரசும் மத்திய அரசும் நிறைவேற்றக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Body:சேலத்தில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக சேலம் மாவட்ட செயலாளர் எஸ் கே செல்வம், துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில்," நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு பெற்று தராமல் இருக்கும் தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று கூறிக் கொள்வதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது.

சேலம் , தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பாதிப்பு அடையும் வகையிலும் மக்களின் குடியிருப்புகளை அகற்றும் வகையிலும் நீராதாரங்கள், மலைகள், காடுகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு தொழில் வளர்ச்சி கொண்டு வரப்போகிறோம் அதற்காக 8 வழி சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியபோது , மேடையில் அமைதியாக இருந்துவிட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார் .

மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்டாயமாக 8 வழி சாலை அமைக்கப்படும் என்றும் கூறுகிறார் .இதில் எங்கே அவர் மக்களின் உணர்வுகளை மதித்தார்.

அதேபோல ஹைட்ரோகார்பன் திட்டத்திலும் அப்படித்தான் . அந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று நம்மிடையே கூறுகிறார்கள்.

அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும் . ஏற்கனவே இருக்கிற நான்குவழி சாலைகள் எல்லாவற்றையும் 8 வழி சாலை களாக மாற்றினால் தொழில் வளர்ச்சி ஏற்படாதா ? என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார் . அப்போது டிடிவி தினகரன்,"
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் அதிமுகவிற்கு தோல்வி பயம் . அடுத்ததாக பருவ மழை வந்துவிடும்.

புயல் மழையை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தள்ளி போட்டு கொண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் சென்று விடுவார்கள். இதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்.

யாரோ சில நிர்வாகிகள் சொந்த காரணத்திற்காக சுயநலத்திற்காக சுய விருப்பத்தின் பேரில் கட்சியை விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள் அதனால் அமமுக தேய்ந்து விடுமா என்ன?

மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் திமுக வெற்றி பெற்றது விபரீத ராஜ யோகம் என்று தான் கூற வேண்டும் . அவர்கள் தமிழகத்திற்காக குரல்கொடுக்கவேண்டும்.

பிஜேபியுடன் பேசி துணை சபாநாயகர் பதவி வாங்கலாம் என்றுதான் திமுகவினர் நினைப்பார்கள் அவ்வளவுதான் " என்று தெரிவித்தார்.

Conclusion:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.