ETV Bharat / state

பருவமழை காரணமாக ஓமலூரில் மரம் நடும் விழா - எம்.எல்.ஏ. பங்கேற்பு! - ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர்

சேலம்: தொடர்ந்து பெய்யும் பருவமழை காரணமாக ஓமலூர் அருகேயுள்ள கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழாவை ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.

Tree Planting Ceremony in Omalur due to Monsoon - Assembly Member Participates!

author img

By

Published : Jul 24, 2020, 8:36 PM IST

கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் தென்மேற்கு பருவமழை பொழிவு அதிகமாக உள்ளது. இதையடுத்து கோட்டமேட்டுப்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் இணைந்து பலன்தரும் மரங்களை நட முடிவு செய்தனர்.

இந்நிலையில், இன்று அவர்கள் இணைந்து 500க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை மற்றும் பலவகை மரக்கன்றுகளை நடும் விழாவை நடத்தினர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஓமலூர் அதிமுக சட்டமன்ற வெற்றிவேல் கலந்துகொண்டு, மரக்கன்றை நட்டு வைத்து, மரம் நடும் விழாவை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஓமலூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் வனிதாரமேஷ் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர், கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.