ETV Bharat / state

ரயிலில் பெண்ணிடம் 10 சவரன் நகைகள் கொள்ளை! - Salem Railway Station

சேலம்: காரைக்கால் சென்ற பயணிகள் ரயிலில் பெண்ணிடம் 10 சவரன் தங்க நகைகள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

train theft
author img

By

Published : Nov 5, 2019, 8:12 PM IST

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் உள்ளது நத்தாங்கரை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (40). இவர் சேலத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலில் பகல் 1.30 மணியளவில் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் ஏறினார்.

இந்த ரயில் இரண்டு மணி அளவில் சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி ரயில் நிலையம் சென்ற போது படிக்கட்டில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்வி அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளைப் பறித்து மின்னல் வேகத்தில் குதித்து தப்பி ஓடினார்.

மின்னாம்பள்ளி ரயில் நிலையம்

பின்னர் ரயில் பயணிகள் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, அவர் ஓடிய வழியே பொதுமக்கள் சிலர் சென்றனர். ஆனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. பின்னர் செல்வி நகை பறிப்பு சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இளைஞரைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழ்நாடு அரசு ரூ. 82 கோடி ஒதுக்கீடு!

Intro:சேலத்தில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயிலில் பெண்ணிடம் 10 சவரன் தங்க நகை பட்டப்பகலில் பறிக்கப்பட்டது. இந்த நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Body:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் உள்ளது நத்தாங்கரை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. 40 வயதான செல்வி நேற்று சேலம் வந்து இருந்தார். பின்னர் சேலத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலில் பகல் 1 30 மணி அளவில் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் ஏறினார்.

இந்த ரயில் இரண்டு மணி அளவில் சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி ரயில் நிலையம் சென்ற போது படிக்கட்டில் நின்று இருந்த வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்வி அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையை பறித்து மின்னல் வேகத்தில் குதித்து தப்பி சென்றான்.

செல்வி திருடன் திருடன் என சத்தமிட்டார். அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. பின்னர் ரயில் பயணிகள் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதன்பிறகு திருடன் ஓடிய வழியே பொதுமக்கள் சிலர் சென்றனர் ஆனால் திருடனை பிடிக்க முடியவில்லை. பின்னர் செல்வி நகை பறிப்பு சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் ஆய்வாளர் இளவரசி மற்றும் காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இன்று காலை மின்னாம்பள்ளி ரயில் நிலையத்திற்கு செல்வியை அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.