ETV Bharat / state

20 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - போக்குவரத்துப் பணியாளர்கள் - Tamil Nadu Transport Department

சேலம்: தங்களின் அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் வலியுறுத்தியுறுத்தியுள்ளனர்.

transport
transport
author img

By

Published : Dec 7, 2019, 5:13 PM IST

சேலத்தில் இன்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் ஒன்றிப்பின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில், ஒன்றிப்பின் மாநில தலைவர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் 20 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறுகையில், "தமிழ்நாடு அளவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அதற்கு இணையான பணியிடங்களில் அமைச்சுப் பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் விகிதாச்சாரம் தொடர்பாக, முன்னாள் போக்குவரத்து ஆணையர் சி.பி. சிங் அனுப்பிய முன்மொழிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும்.

அரசுக்கு சிறந்த வருவாய் ஆதாரமாக இருக்கும் சோதனைச் சாவடிகளை, தற்போதுள்ள நடைமுறைகளின்படி தொடரவும், புதிய சோதனைச் சாவடிகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

ஒன்றிப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன்
அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நூறு விழுக்காடு கணினிமயமாக்கப்பட்டு அதிவேக இணையதள வசதியை உருவாக்கித் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சங்கப் பிரதிநிதிகளை அழைத்து தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க... விபத்தில் கை முறிந்தவருக்கு ரூ. 26.85 லட்சம் இழப்பீடு MTC-க்கு உத்தரவு

Intro:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் இன் 20 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Body:சேலத்தில் இன்று தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் ஒன்றிப்பின் மாநில தலைவர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில பிரச்சார செயலாளர் சுகமதி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ஒன்றிப்பின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறுகையில் ," தமிழக அளவில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் அமைச்சுப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் விகிதாச்சாரம் தொடர்பாக முன்னாள் போக்குவரத்து ஆணையர் சிபி சிங் அனுப்பிய முன்மொழிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலர் பதவி உயர்வு பெற்றவர்களையும் கணக்கில் கொண்டு 4:1 எனும் விகிதத்தில் பணியமர்த்தப்பட வேண்டும்.

அரசுக்கு சிறந்த வருவாய் ஆதாரமாக இருக்கும் சோதனைச் சாவடிகளை தற்போதுள்ள நடைமுறைகளின் படி தொடரவும் புதிய சோதனை சாவடிகளை உருவாக்கிடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையில் பணியாற்றி நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்து துறையில் பணியமர்த்தும் செய்யப்பட்ட பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணி வரன்முறை செய்ய வேண்டும் .

மாநில எல்லையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் செயலகப்பிரிவில் தொழில்நுட்பம் அல்லாத மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும் .

அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நூறு சதவிகிதம் கணினி மயமாக்கப்பட்டு அதிவேக இணையதள வசதியை உருவாக்கித் தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக இன்றைய மாநில அளவிலான மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சங்க பிரதிநிதிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தையில் உடனடியாக தொடங்க வேண்டும்" என்று தெரிவித்தார்

Conclusion:இந்த மாநில அளவிலான மாநாட்டிற்கு சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பின் மாவட்ட தலைவர்கள் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.