தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல் துறையினர் விழிப்புணர்வு செய்துவருகிறார்கள். தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த கீர்த்தி ராஜ் என்பவருக்கும், நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த தனசிரியா என்பவருக்கும் இன்று சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் சில மணி நேரத்தில் புதுமணத் தம்பதியி இருவரும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்று திருமணத்திற்கு வந்தவர்களிடமும், பொதுமக்களிடமும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள் என விழிப்புணர்வு செய்தனர்.
இவர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.