தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டங்களில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்வதற்காக நாளை சேலம்வருகிறார். சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு நாளை மாலை சேலம் வரும் அவர், நெடுஞ்சாலை நகரிலுள்ள தனது இல்லத்தில் தங்கவுள்ளார்.
பின்னர் ஜூன் 25ஆம் தேதி கார் மூலம் கோவை செல்கிறார். அங்கு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு மீண்டும் சேலம் திரும்பும் அவர், ஜூன் 26ஆம் தேதி திருச்சி செல்கிறார்.
அங்கு கரோனா தடுப்புப் பணி, குடிமராமத்துப் பணி ஆகியவற்றை ஆய்வுசெய்துவிட்டு பின்னர் சேலம் திரும்புகிறார். ஜூன் 27ஆம் தேதி சேலம் முகாம் அலுவலகத்தில், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஜூன் 28ஆம் தேதி சேலத்திலிருந்து பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, கார் மூலம் மீண்டும் சென்னை திரும்பிச் செல்கிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.