ETV Bharat / state

முதலமைச்சர் பழனிசாமியின் தாயாருக்கு குடும்ப வழக்கப்படி 3ஆம் நாள் சடங்கு!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவையொட்டி மூன்றாவது நாள் சடங்கு நிகழ்ச்சி சிலுவம்பாளையத்தில் குடும்ப வழக்கப்படி நடைபெற்றது.

salem
salem
author img

By

Published : Oct 15, 2020, 2:30 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 12ஆம் தேதி சேலத்தில் காலமானார். அவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தவுசாயம்மாள் உடல் சிலுவம்பாளையத்தில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

துக்க நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று (அக். 15) மூன்றாவது நாள் சடங்கு சிலுவம்பாளையத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரது குடும்ப வழக்கப்படி நடைபெற்றது. தாயாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, இடுகாட்டிற்கு முதலமைச்சர் பழனிசாமி, தனது சகோதரர், உறவினர்களுடன் நடந்துசென்று காவிரிக்கரையில் சடங்கு முறைகளைச் செய்தார். பின்னர், தனது இல்லத்தில் தாயாருக்கு குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முதலமைச்சரின் தாயாருக்கு மூன்றாம் நாள் சடங்கு

இதனிடையே, காங்கிரஸ் செயல் தலைவர் ஆர். மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், முதலமைச்சரைச் சந்தித்து துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் - விஜய் சேதுபதிக்கு தாமரை கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.