ETV Bharat / state

தம்மம்பட்டி மரசிற்ப வேலைகளுக்கு விரைவில் புவிசார் குறியீடு - சேலம் ஆட்சியர்

சேலம் : தம்மம்பட்டி மரசிற்ப வேலைப்பாடுகளுக்கு விரைவில் புவி சார் குறியீடு பெறப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 27, 2020, 3:07 PM IST

Thammampatti wood carvings will get geographical index soon said salem collector raman

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், விவசாய விளைபொருள்களை ஏற்றுமதி செய்வது குறித்த விளக்கக்கூட்டம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள், தொழில் நிறுவனங்களை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் குழுமங்கள், புதிதாக அமையவிருக்கும் உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான தொழிற்பேட்டைகள் ஆகியவை குறித்து பேசப்பட்டது.

பிரதமரின் சுதந்திர தின உரை 2019இன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்டத்திற்கான ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு அமைத்துள்ளது. அதன் முதல் கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடந்தது. அதில் சேலம் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்ட அறிக்கையைத் தயாரிக்க குழு உறுப்பினர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

மேலும், சேலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சேலம் வெண்பட்டிற்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தம்மம்பட்டி மரசிற்ப வேலைகளுக்கும் விரைவில் புவிசார் குறியீடு பெறப்படும்.

சேலம் மாவட்டத்தில் வெள்ளி கால் கொலுசு, மதிப்புக்கூட்டப்பட்ட தென்னை நார் பொருள்கள், ஜவ்வரிசி பொருள்கள், ஆயத்த ஆடைகள், விசைத்தறி மூலம் துணி உற்பத்தி, பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் உற்பத்தி, எஃகு பொருள்கள் உற்பத்தி ஆகிய தொழில்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும், மாவட்டத்தில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், நூற்பாலைகள், விமான உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை, இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. சில பொருள்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

எனவே, சேலம் மாவட்ட தொழில் முனைவோர்கள் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்ய முன்வர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து சேலம் மாவட்டத்தினை தனித்தன்மையான வெற்றிகரமான ஏற்றுமதி மையமாக உருவாக்க பாடுபட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.